top of page

AMJC

Overview

Program Outcome

Faculty

Placement

Alumni

Achievements

Fee Structure

Syllabus

Download Syllabus

TAMIL

Department of

2a438f92-2796-4185-a2e6-4cfbab271bd4

தமிழ்த்துறை

 

தமிழ் மொழியின் சிறப்பு

 

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

 

கண்ணென்ப வாழும் உயிர்க்கு”

(குறள் – 392)

 

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” (கொன்றைவேந்தன்-7)

 

என்ற வரிகள் மொழிக்குப் பெருமை சேர்ப்பன. தமிழ்மொழி இலக்கியம், இலக்கணம், வரலாறு, நாகரிகம், பண்பாடு, கலை, அறிவியல், மொழிபெயர்ப்பு, கணினி எனப் பல்துறையில் சிறந்து விளங்குகிறது. மூத்த மொழியாகப் பல மொழிகளுக்குத் தாயாக விளங்குகிற நமது தமிழ்மொழி இக்காலத்தில் உலக அரங்கில் செவ்வியல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் பெருமைக்குப் பெருமை சேர்ப்பனவே.

 

தமிழ்த்துறையின் மேனாள் துறைத்தலைவர்கள்

 

நமது கல்லூரியில் 1972 - ஆம் ஆண்டு முதல் தமிழ்த்துறைத் தொடங்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பணிகளைக் காலத்திற்கேற்ப வடிவமைத்துக் கொண்டு தகுதிவாய்ந்த பேராசிரியப் பெருமக்களால் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது.

 

திரு. குருசுப்ரமணியம், திரு. கே. என். பாலசுப்ரமணியன், திரு. ஸ்ரீசந்திரன், திரு. மாணிக்கம், திரு. வேணுகோபாலன், திரு. எஸ். தனுஷ்கோடி, திரு. ராமதாஸ், முனைவர் இரா. இராசேந்திரன் ஆகியோர் தமிழ்த்துறையின் தூண்காளாய் இருந்துத் துறையை வழிநடத்தி வந்துள்ளனர்.

 

தமிழ்த்துறையின் வளர்ச்சி

 

2003 ஆம் ஆண்டு கல்லூரியில் இருபாலாரும் கல்விபயிலும் நடைமுறை வழக்கத்திற்கு வந்தது. 2003- இல் நான்கு பேராசிரியர்கள் என்ற அளவில் தொடங்கிப் படிப்படியாக இன்று 25 பேராசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்ற நிலைப்பாடு தமிழ்த்துறையின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் முகமாய் அமைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக 2019 ஆம் ஆண்டில் இளங்கலைத் தமிழ் (B.A. Tamizh) அறிமுகப்படுத்தப்பட்டது.

 

பாடத்திட்டமும் இலக்கும்

 

இளங்கலையில் முதலாமாண்டு பயில்கிற அனைத்துப் பட்டவகுப்பு மாணவர்களுக்கும் மொழிப்பாடம் (FOUNDATION TAMIL), தமிழல்லாத பிறமொழி பயின்று வருபவர்களுக்கு அடிப்படைத் தமிழ் (BASIC TAMIL), என்கிற நிலையிலும், இரண்டாமாண்டு மாணவர்களில் இளங்கலை (B.A), இளம் அறிவியல் (B.Sc), இளம் வணிகவியல் (B.COM(CS)) ஆகிய பட்டவகுப்புகளிலுள்ள

மாணவர்களுக்கும் தமிழ் கற்பிக்கப்படுகிறது.

 

மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தலோடு மட்டுமல்லாது அவர்களை எதிர்காலச் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் அமைக்க சிறந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், நடிகர்கள், எனப் பல்துறையில் வளர்த்தும் குறிப்பாகச் சமூகத்தின்பால் அக்கறை உள்ளவர்களாகவும் உருவாக்கிக்கொள்ள தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சிறந்த வழிகாட்டிகளாக

இருந்து வருகின்றார்கள். மேலும் பிற கல்லூரிகளில் நிகழும் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் மாணவர்களுக்கும் ஊடகங்களில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்ந்து வருகிறார்கள்.

 

இளங்கலைத் தமிழ் கற்றலினால் ஏற்படும் பயன்கள்

 

சங்க அகப் புற இலக்கியங்கள்

 

சங்க இலக்கியங்களைக் கற்பதன்வழித் தமிழ்மொழியின் தொன்மை, இலக்கியச் சிறப்பு, பழமை முதலானவற்றை அறிவதோடு தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டுத் தமிழின் தனித்துவத்தை அறிந்துகொள்ளுதல்.

 

அக இலக்கியம் கற்பதன் வாயிலாகப் பண்டைத் தமிழர்களின் வாழ்வியல் நெறிகளாகிய காதல், இல்வாழ்க்கை, முதலானவற்றை உணர்ந்து இக்காலத்திற்கு எது தேவையோ அதைப் பின்பற்றுவதற்கு உறுதுணைபுரிதல்.

 

புற இலக்கியம் பண்டைத் தமிழர்கள் எத்தகைய போர்நெறியைக் கொண்டிருந்தனர் என்பது பற்றியும் நாட்டின் வளத்தைப் பெருக்குவதற்கும் எல்லையை விரிவுபடுத்துவதற்கும் எத்தகைய செயல்களில் ஈடுபட்டனர் என்பதை அறிவதற்கும் உதவிபுரிகிறது. நம்முன்னோர் எத்தகைய கொடையாளியாக விளங்கினர் என்பதையும் அறிந்துகொள்வதற்கு அவ்விலக்கியம் பயன்படுகிறது.

 

நீதி,பக்தி,காப்பிய இலக்கியங்கள்

உணர்த்தும் வாழ்வியல்

 

இரந்தோர்க்கு ஈதல், கள்ளுண்ணாமை, உயிர்கொலை செய்யாமை, நன்றி மறவாமை முதலான தமிழர்களின் அறநெறியை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துக் கூறி நன்னெறியைப் புகட்டுவதற்கு அற இலக்கியங்கள் பயன்படுகின்றன.

 

பக்தி இலக்கியம் கற்பதன் வாயிலாகத் தமிழகத்தில் இருந்த பல்வேறு சமயங்கள் பற்றியும் அவற்றின் கொள்கைகள் பற்றியும் வழிபாட்டு முறைகள் பற்றியும் அறிந்துகொள்ளுதல்.

 

பண்டைத் தமிழர்களில் குடிமக்கள், முடிமன்னர் இவர்களின் வாழ்வியல் வரலாற்றைப் புனைந்துரைத்து எழுதப்படும் காப்பியங்கள் மாணவர்கள் தம் வாழ்வில் ஏற்படுகிற இன்னல்களைக் களைந்துகொள்வதற்கும் மனவெழுச்சியை வளர்த்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது.

 

தமிழக வரலாறும் தமிழிலக்கிய வரலாறும்

 

தமிழக வரலாற்றைக் கற்கின்றபொழுது பழந்தமிழ்ச் சமூகத்தின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கம் பற்றியும் தமிழரசர்களைப் பற்றியும் ஆட்சி மாற்றத்தால் மக்கள் எத்தகைய நன்மை, தீமைக்கு ஆட்பட்டனர் என்பது பற்றியும் அறிந்துகொள்ளலாம். ஒரு புதிய சட்டம் இயற்றும்போது அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் பயன்பற்றியும் ஆராயக்கூடிய மனப்பக்குவத்தையும் தெளிவான சிந்தனையையும் மாணவர்கள் பெறுவர். போட்டித் தேர்வின்போதும் நேர்காணலின்போதும் தெளிவான பதிலை முழு தைரியத்தோடு வெளிப்படுத்த

இவ்வரலாறு பெரிதும் துணை நிற்கும்.

 

தமிழ் இலக்கிய வரலாறு கற்பதன் வாயிலாகக் காலந்தோறும் தமிழ் இலக்கியங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் அறிந்துகொள்ளுதல். தமிழிலக்கியப் பரப்பைப் பிறருக்கு எடுத்துரைக்கவும் பயன்படுகிறது.

 

புரட்சிக் கவிகளும், இலக்கியத்திறனாய்வும்,ஒப்பீட்டிலக்கியமும்

 

பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை போன்ற கவிஞர்களின் வரலாற்றை அறிந்துகொள்வதன் வாயிலாக மாணவர்கள் தம் வாழ்விற்கான

முன்னோடியாக அவர்களைக்கொள்ள முடியும் .தன்னம்பிக்கையும் ஊக்கமும்பெறுவர்.

 

இலக்கியத் திறனாய்வின்வழி தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டுத் தமிழின் பெருமையைத் தொன்மையை அறிந்துகொள்ளுதல். ஓரிலக்கியத்தை மாணவர்கள் எவ்வாறு அணுகவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தல். உலகளவில் உள்ள சிறந்த திறனாய்வாளர்களை இனங்காணவும் அறிவியல் ஆய்வுகளுக்கும் இலக்கிய ஆய்வுகளுக்குமான

வேறுபாட்டை தெரிந்துகொள்ளவும் பயன்படுகிறது.

 

திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் வழி திராவிட மொழிகளின் இலக்கணங்களை அறிவதோடு அவற்றிலிருந்து தமிழ்மொழி எவ்வகையில் வேறுபட்டிருக்கின்றது என்பதையும் அதன் ஒற்றுமையையும் அறியமுடிகிறது.

 

அகராதியியல், இதழியல், மொழிபெயர்ப்பியல்

 

அகராதியியல் பயில்வதன் வழி தமிழ்ச்சொற்களின் பொருளை அறிந்து கொள்ளுதல், அதன் வேர்ச்சொற்களைக் கண்டறிந்து அது உலகமொழிகளில் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுகின்றனர். இதழியல் பயில்வதன் வாயிலாக ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை அறிந்துகொள்ளுதல், கதை, கவிதை எழுதுவதற்கும் இதழை எடுத்து

நடத்துவதற்கும் பயனுடையதாக விளங்குதல்.

 

தமிழ் இலக்கியங்கள் எந்தெந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்தும் மொழிபெயர்ப்பினால் ஏற்படக்கூடிய பயன்கள் குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்வதற்குப் பயன்படுகின்றது.

 

நாட்டுப்புறவியலும் படைப்பிலக்கியமும்

 

நாட்டுப்புறவியல் பயில்வதன் வாயிலாக ஒரு நாட்டின் உண்மையான வரலாற்றையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் கலை இலக்கியத்தையும் மாணவர்கள் அறியமுடியும். ஏட்டிலே வராத எழுத்திலே காணமுடியாத ஆனால் மக்கள் உள்ளத்திலே ஊறிக்கிடக்கும் எத்தனையோ எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் அப்படியே மாணவர்களுக்குப் படம்பிடித்துக் காட்டுவது இவ்விலக்கியம். சமுதாய வளர்ச்சியை நிறைகுறையோடு காட்டக்கூடிய கண்ணாடியாக இவ்விலக்கியம் விளங்குகிறது.

 

படைப்பிலக்கியம் பாடத்தைக் கற்பதன் வாயிலாகக் கவிதை, சிறுகதை, நாவல் போன்ற இலக்கியங்கள் தமிழ்மொழியில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கியிருக்கின்றன என்பது பற்றி அறிவதற்குக் காரணமாக அமைகிறது. மாணவர்கள் சிறந்த இலக்கியப் படைப்பாளியாக உருவாகுவதற்கும் இவ்விலக்கியம் ஊக்கத்தைத் தருகிறது.

 

நோக்கு

 

தரமான தமிழ்க்கல்வியின் வழித் தமிழ்மொழி உணர்வும் கலை, இலக்கியத்திறனாய்வுப் பார்வையும் சமூக அக்கறையும் மானுட விழுமியங்களைப் போற்றும் எண்ணமும் வாழ்வை எதிர்கொள்ளும் ஆற்றலும் கொண்ட திறன்மிக்க சிறந்த இளைய சமுதாயத்தை உருவாக்குதல். தரமான தமிழ்க்கல்வியின் வழித் தமிழ்மொழியில் ஆளுமையும் தமிழரின் கலை, இலக்கிய வடிவங்களைத் திறனாய்வுடன் அணுகும் பார்வையும் கைவரப்பெற்ற ஆற்றல்மிக்க இளைய மாணவர்களை உருவாக்குதல்.

 

இலக்கு

 

தமிழுக்கும் – வரலாறு, தத்துவம், தொல்லியல், நாட்டுப்புறவியல், இசை, ஊடகவியல் உள்ளிட்ட பிற துறைகளுக்குமான தொடர்புகளைப் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றிற்கான

அடிப்படைகளைக் கற்பித்தல்.

 

காரண காரிய தொடர்புடன் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் வகையிலும் படைப்பாக்கத் திறனைத் தூண்டும் வகையிலும் பயிற்சிகள் அளித்தல்.

 

 

 

Overview

Program Outcome

Faculty

பணி வாய்ப்பு

 

இளங்கலைத் தமிழ் கற்றபின்னர் ஆசிரியர் பயிற்சி முடித்துப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரியலாம்.

 

இளங்கலைத் தமிழோடு முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர்பட்டம் பெற்றுக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியலாம்.

 

முதுகலை முடித்தபின்னர் பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று அதன் உதவியோடு முனைவர் பட்டத்திற்கான கல்வி உதவித்தொகையை ஐந்து

ஆண்டுகள் பெறலாம்.

 

இளங்கலை முடித்த பின்னர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்துகிற தேர்வினை எழுதி, அதில் வெற்றிபெற்ற பிறகு அரசுப் பணியில் சேருவதற்கான வாய்ப்பு

 

இளங்கலை பட்டத்தைப் பெற்று உயர்கல்வியை அடைந்த பின்னர் சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் முதலான நாடுகளில் தமிழாசிரியர் பணிக்கான வாய்ப்பு.

 

இளங்கலைத் தமிழ் முடித்த பின்னர் உயர்கல்வியைப் பெற்றுத் தமிழ்ச் சொற்களை உருவாக்குதல், சொல்லடைவு, தொடரடைவு உருவாக்குதல், மொழிபெயர்ப்பு செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடும் தமிழ் வளர்ச்சித்துறையில் பணிவாய்ப்பினைப் பெறுதல். தமிழ் இணைய கல்விக் கழகம் போன்ற நிறுவனங்களில் பணிவாய்ப்பு.

 

இந்து சமய அறநிலையத் துறையில்பணிவாய்ப்பு வானொலி,தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் செய்தி சேகரிப்பாளர், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்ச்சி

ஒருங்கிணைப்பாளர் போன்ற பணிவாய்ப்புகள்.

 

பத்திரிக்கைத் துறைகளில் மெய்ப்புத்திருத்துநர், ஆசிரியர், துணையாசிரியர் பணிவாய்ப்பு.

 

திரைப்படத் துறையில் பாடல், கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Placements

Designation

NAME OF THE ALUMNI

Alumni

Fee Structure

bottom of page