Department of Computer Science
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி”
என்று தமிழ்க் குடியின் பழமையினையும், பெருமையினையும் புறப்பொருள் வெண்பாமாலை தந்த சேரன் ஐயனாரிதனார் மொழிவார்.
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” (குறள் – 392)
என்பது குறள் “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” (கொன்றைவேந்தன்-7)
ஆகிய இவ்வரிகள் எல்லாம் நம் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்ப்பன.
தமிழ்மொழி இலக்கியம், இலக்கணம், வரலாறு, நாகரிகம், பண்பாடு, கலை, அறிவியல், மொழிபெயர்ப்பு, கணினி எனப் பல்துறையில் சிறந்து விளங்குகிறது. மூத்த மொழியாகப் பல மொழிகளுக்குத் தாயாக விளங்குகிற நமது தமிழ்மொழி இக்காலத்தில் உலக அரங்கில் செவ்வியல்மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் பெருமைக்குப் பெருமை சேர்ப்பனவே.
நமது கல்லூரியில் 1972-ஆம் ஆண்டு முதல் தமிழ்த்துறைத் தொடங்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பணிகளைக் காலத்திற்கேற்ப வடிவமைத்துக் கொண்டு தகுதிவாய்ந்த பேராசிரியப் பெருமக்களால் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது.
திரு. குருசுப்ரமணியம், திரு. கே. என். பாலசுப்ரமணியன், திரு. ஸ்ரீசந்திரன், திரு. மாணிக்கம், திரு. வேணுகோபாலன், திரு. எஸ். தனுஷ்கோடி, திரு. ராமதாஸ், முனைவர் இரா. இராசேந்திரன் ஆகியோர் தமிழ்த்துறையின் தூண்காளாய் இருந்துத் துறையை வழிநடத்தி வந்துள்ளனர்.
மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தலோடு மட்டுமல்லாது அவர்களை எதிர்காலச் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் அமைக்க சிறந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், நடிகர்கள், எனப் பல்துறையில் வளர்த்தும் குறிப்பாகச் சமூகத்தின்பால் அக்கறை உள்ளவர்களாகவும் உருவாக்கிக்கொள்ள தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சிறந்த வழிகாட்டிகளாக இருந்து வருகின்றார்கள். மேலும் பிற கல்லூரிகளில் நிகழும் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் மாணவர்களுக்கும் ஊடகங்களில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்ந்து வருகிறார்கள்.
2003 ஆம் ஆண்டு கல்லூரியில் இருபாலாரும் கல்விபயிலும் நடைமுறை வழக்கத்திற்கு வந்தது. 2003- இல் நான்கு பேராசிரியர்கள் என்ற அளவில் தொடங்கிப் படிப்படியாக இன்று 22 பேராசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்ற நிலைப்பாடு தமிழ்த்துறையின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் முகமாய் அமைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக 2019-2020 ஆம்கல்வியாண்டில் இளங்கலைத் தமிழ் (B.A. Tamizh) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடத்திட்டம் என்கிற வகையில் இளங்கலையில் முதலாமாண்டு பயில்கிற அனைத்துப் பட்டவகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் (FOUNDATION TAMIL), தமிழல்லாத பிறமொழி பயின்று வருபவர்களுக்கு அடிப்படைத் தமிழ் (BASIC TAMIL), என்கிற நிலையிலும், இரண்டாமாண்டு மாணவர்களில் இளங்கலை (B.A), இளம் அறிவியல் (B.Sc), இளம் வணிகவியல் (B. COM (CS) ஆகிய பட்டவகுப்புகளிலுள்ள மாணவர்களுக்கும் தமிழ் கற்பிக்கப்படுகிறது.

Vision
தரமான தமிழ்க் கல்வியின் வழித் தமிழ்மொழி உணர்வும்
கலை, இலக்கியத் திறனாய்வுப் பார்வையும்
சமூக அக்கறையும் மானுட விழுமியங்களைப் போற்றும் எண்ணமும் வாழ்வை எதிர்கொள்ளும் ஆற்றலும் கொண்ட திறன்மிக்க சிறந்த இளைய சமுதாயத்தை உருவாக்கல்.

Mission
தரமான தமிழ்க் கல்வியின் வழித் தமிழ்மொழியில் ஆளுமையும் தமிழரின் கலை இலக்கிய வடிவங்களைத் திறனாய்வு முறையில் அணுகும் பார்வையும் கைவரப் பெற்ற ஆற்றல்மிக்க இளைய மாணவர்களை உருவாக்குதல்..
தமிழ் ஆய்வுக்களத்தில் அறிமுக நிலையிலான ஆய்வுகளைச் செய்யும் வகையில் மாணவர்களைத் தயார்ப்படுத்துதல்.,
தமிழுக்கும் – வரலாறு, தத்துவம்,தொல்லியல்,நாட்டுப்புறவியல், இசை,ஊடகவியல் உள்ளிட்ட பிற துறைகளுக்கான் தொடர்புகளைப் புரிந்து கொள்ளும் வகையில் பிற துறைகள் சார்ந்த அடிப்படைகளைப் பயிற்றுவித்தல்.